உத்தரபிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள்

0 2780

மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்வுகளை உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

600 க்கும் குறைவான தொற்று எண்ணிக்கை உள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அளிக்கலாம் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த காணொலி  கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த 75 மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை அதற்கும் குறைவாகவே இருப்பதால், நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அமலாகின்றன.

அதன்படி சனி, ஞாயிறு தவிர வாரத்தின் 5 நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தளர்வுகள் இருக்கும். வார இறுதி நாட்கள் மற்றும் இரவு 7 முதல் காலை 7 மணி வரையிலான ஊரடங்கில் மாற்றமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments