டெல்டா மரபணு மாற்ற வைரஸ், நினைப்பதை விட மிகவும் கொடூரமானதாக இருக்குமோ என மருத்துவர்கள் கருத்து

0 4332

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணமான டெல்டா மரபணு மாற்ற வைரஸ், நினைப்பதை விட மிகவும் கொடூரமானதாக இருக்குமோ என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் டெல்டா கொரோனா வைரஸஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த அறிகுறிகளுடன், காது கேளாமை, தீவிர வயிற்றுக் கோளாறுகள், உறுப்புகள் சிதையும் அளவுக்கான ரத்தம் உறைதல் ஆகிய புதிய விளைவுகளும் தோற்றுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  பிரிட்டனில் முதலில் காணப்பட்ட ஆல்பா மரபணு மாற்ற வைரசை விட இந்தியாவில் பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் 50 சதவிகித அதிக தொற்றும் திறனுடையது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா, காம்மா ரக மரபணு  மாற்ற வைரஸ் தொற்றின் போது இது போன்ற மிகவும் ஆபத்தான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments