வைர வியாபாரி மெகுல் சோக்சியை என்ன செய்வது என நீதிமன்றம் முடிவு செய்யும்: டொமினிக் பிரதமர் தகவல்

0 2341

வங்கி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்சியை என்ன செய்வது என நீதிமன்றம் முடிவு செய்யும் என அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள டொமினிக் தீவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் (Roosevelt Skerrit ) கூறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து தப்பி ஆன்டிகுவா&பார்படா தீவுகளில் அடைக்கலமான சோக்சிக்கு அந்நாட்டின் குடியுரிமையும் வழங்கப்பட்டது. அவர் அங்கிருந்து மாயமாகி, அருகில் உள்ள டொமினிக் தீவில் கைது செய்யப்பட்டார்.

இதனால் அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சிகள் தாமதமடைந்துள்ளன. இந்த நிலையில், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments