தென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளு பேத்திக்கு சிறைத் தண்டனை

0 6451

மகாத்மா காந்தியின் பேத்தியும், தென்னாப்பிரிக்காவில் எம்பியாக இருந்தவருமான  இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு பண மோசடி வழக்கில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.

56 வயதான இவர், இந்தியாவில் இருந்து, சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக, மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றினார் என, டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2015 ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டாலும், இப்போது தீர்ப்பு வெளியாகி, மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments