இந்தியாவில் 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது ஒரு நாள் கொரோனா பாதிப்பு

0 3446

இந்தியாவில் 66 நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் கொரோனா தொற்று 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்து, 86,498 ஆகப் பதிவாகியுள்ளது.

இதேபோல ஒரு நாள் கொரோனா பலி எண்ணிக்கை, 49 நாட்களுக்குப் பிறகு, 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 82 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை சுமார் 13 லட்சமாகக் குறைந்துள்ளது.

மாநிலவாரியாக தினசரி பாதிப்புகளை பார்க்கும்போது, 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 11,958 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கர்நாடகம் இரண்டாமிடத்திலும், 10,219 பேருக்கு உறுதி செய்யப்பட்டு மகாராஷ்டிரம் மூன்றாமிடத்திலும், 9 ஆயிரத்து 313 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கேரளம் நான்காமிடத்திலும், 5 ஆயிரத்து 887 பேருக்கு உறு செய்யப்பட்டு, மேற்குவங்கம் 5ஆம் இடத்திலும் உள்ளன. நாட்டில் இதுவரை 23 கோடியே 61 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments