தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிப்பு

0 16340

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ரேஷன் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுளது.

அதன்படி, இன்று முதல் தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளும் காலை 9 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்படும். மறு உத்தரவு வரும் வரை இந்த நேரக்கட்டுப்பாடு தொடரும். கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை 2ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்களை 11-ந் தேதியில் இருந்து 14-ந் தேதி வரை பிற்பகலில் வீடு வீடாக சென்று வழங்க ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் முற்பகலில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழக்கம்போல் விநியோகம் செய்வதை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments