கொரோனா தடுப்பூசிக்காக 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு முடிவு

0 2376

மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், அதற்கான நிதிஒதுக்கீடு 45 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்  என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டு மக்களுக்கு நேற்று மாலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவைத் தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி தான் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி பலரது உயிரையும் காப்பாற்றியுள்ளதாக அவர் கூறினார்.

மூக்கு வழியாக சொட்டு மருந்தாக செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

தடுப்பூசி பணிகளுக்காக ஏற்கனவே 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நடப்பு பட்ஜெட்டில் இந்தத் தொகை 45 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அதிருப்தி தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி புதுப்பித்தல் கொள்கைக்கு பிரதமர் மோடி கடந்த ஒன்றாம் தேதியை ஒப்புதல் அளித்ததாகவும், அதற்கான பணிகள் அன்றிலிருந்தே தொடங்கி விட்டதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments