சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை

0 3550

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில், நள்ளிரவில் மீண்டும் மழை கொட்டித் தீர்த்தது..

அம்பத்தூரில் சூறைக் காற்றுடன் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments