டெல்லி அருகே வனப்பகுதியில் கட்டப்பட்ட 10 ஆயிரம் கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

0 2847

டெல்லி அருகே வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேலான கட்டடங்களை இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் ஆரவல்லி வனப்பகுதியின் லக்கட்பூர்-கோரி கிராமத்தில் சட்டவிரோதமாக 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனை அகற்றக் கோரிய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், வன நிலத்தை மீட்பதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டனர்.

எனவே அடுத்த 6 வாரங்களுக்குள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 10 ஆயிரம் வீடுகளை இடிக்கவும், ஃபரிதாபாத் மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வீடுகளை இடிக்கும் போது பாதுகாப்புக்காக தேவையான அளவு போலீசார் இருக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments