தரையிறங்கும்போது திடீரெனக் குலுங்கிய விமானம்... பயணிகள் 8 பேர் காயம்

0 2903

மும்பையில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்ற பயணிகள் விமானம் தரையிறங்கும்போது குலுங்கியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

விஸ்டாரா விமான நிறுவனத்தின் யு.கே.-775 என்ற விமானம் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் சிறிது குலுங்கியதால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.  இந்த சம்பவத்தில் விமானத்திற்குள் இருந்த 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

அவர்களில் 3 பேர் பலத்த காயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments