கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீத கொடுமை..! கணவனின் களவாணி நண்பர்கள்

0 16224

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே போதைக்கு அடிமையான கணவன், 5 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு , கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்த பாலியல் கொடுமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லங்க கணவணும் , அவனது விபரீத கூட்டாளிகளும் கம்பி எண்ணும் சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

பண்ருட்டி எல்.ஆர் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயமணி. இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தற்போது இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் ஜெயமணி மீது அவரது மனைவி பண்ருட்டி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் தனது கணவர் ஜெயமணி மதுவாங்கிக் கொடுத்தால் போதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய வில்லங்க எண்ணம் கொண்டவர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த போது சத்து மாத்திரை என்று மயக்க மாத்திரையை கொடுத்து தன்னை மயங்க வைத்ததாகவும் அரை மயக்கத்தில் இருந்த போது , கணவரே அவரது கூட்டாளி சுந்தரமூர்த்தியை அழைத்து வந்தது, தன்னை பலாத்காரம் செய்ய வைத்ததாக அதிர்ச்சி தகவலை புகாரில் தெரிவித்துள்ளார் ஜெயமணியின் மனைவி.

இதே போல கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது கூட்டாளி மணிகண்டன் என்பவரை அழைத்து வந்து அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும், அந்த விபரீத செயலுக்கு மறுத்த போது தான், தான் கர்ப்பிணியாக இருக்கும் போது சுந்தரமூர்த்தி ஏற்கனவே என்னை சீரழித்த தகவலை கணவர் ஜெயமணி சொல்லிக் காட்டியதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தான் கடுமையாக எதிர்த்த நிலையிலும் கணவரின் துணையுடன், அவரது கூட்டாளி மணிகண்டன் தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதனை வெளியில் சொன்னால் குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கணவர் ஜெயமணி மிரட்டி வந்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ள ஜெயமணியின் மனைவி, தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையின் எதிர்காலம் கருதி அப்போது புகார் அளிக்கவில்லை என்று தனது இயலாமையை தெரிவித்துள்ளார்.

மீண்டும் சிலரை அழைத்து வந்து கணவன் ஜெயமணி, கூட்டு பாலியல் கொடுமைக்குள்ளாக்க முயன்றதால் அவரிடம் சண்டையிட்டு தாய்வீட்டிற்கு வந்து விட்டதாகவும், தற்போது மறுபடியும் தன்னை மிரட்டிவருவதால் தன்னையும் , குழந்தையையும் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த காவல்துறையினர் ஜெயமணியை பிடித்து பிடித்து விசாரித்த போது, மனைவி புகாரில் தெரிவித்த அத்தனையும் உண்மை என்பதை ஜெயமணி ஒப்புக் கொண்டான். அவனது தகவலின் பேரில் அந்த பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். போதை தலைக்கேறியதால் என்ன செய்கிறோம் என்பதை உணரவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஜெயமணி, அவனது கூட்டாளிகளான மணிகண்டன், சுந்தமூர்த்தி ஆகிய 3 பேரையும் பலாத்கார வழக்கில் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments