டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு..! மெட்ரோ சேவை; மாநகரப் பேருந்துப் போக்குவரத்து மீண்டும் துவக்கம்

0 2741

டெல்லி, மும்பை மாநகரங்களில் கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 50சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. அனைத்துச் சந்தைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றிக் கடைகள் ஒருநாள் விட்டு ஒருநாள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதால் டெல்லியில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மாநகரப் பேருந்துப் போக்குவரத்து தொடங்கிய நிலையில், இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments