பிரதமரின் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

0 4328

பிரதமரின் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த தடுப்பூசிகளில் 75 சதவீத தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்ததை, மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று தடுப்பூசி கொள்கையை பிரதமர் மாற்றியமைத்ததற்காக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று ஏற்கனவே பலமுறை பிரதமர் வலியுறுத்தியதை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், தடுப்பூசி பதிவு மற்றும் நிர்வாக நடைமுறை மீதான முழுமையான கட்டுப்பாடு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்கப்படுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்துளளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments