இ-பதிவு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட சுயதொழில் என்ற பிரிவு மீண்டும் சேர்ப்பு..!

0 15097

ராளமானவர்கள் விண்ணப்பித்ததால் இ-பதிவு பெறும் இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சுயதொழில் என்ற பிரிவு சில மணி நேரங்களிலேயே மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய சுய தொழில் செய்பவர்கள் இ-பதிவு அனுமதியுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலை முதலே சுயதொழில் செய்பவர்கள் உட்பட ஏராளமானோர் விண்ணப்பித்ததால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனிடையே, இ-பதிவு பெறும் இணையதள பக்கத்தில் இருந்து சுயதொழில் என்ற பிரிவு தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments