தமிழ்நாட்டில் 20,000க்கும் கீழ் சரிந்த கொரோனா பாதிப்பு..!

0 10365

மிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழாகவும், உயிரிழப்பு 400 க்கு கீழாகவும் சரிந்த நிலையில் வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 448 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது. நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 31 ஆயிரத்து 360 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவையில் 2 ஆயிரத்து 564 பேரும், ஈரேட்டில் ஆயிரத்து 616 பேரும், சென்னையில் ஆயிரத்து 530 பேரும், திருப்பூரில் ஆயிரத்து 27 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மட்டும் 4 இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments