ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் ராணுவ வீரர்கள் உட்பட 119 பேர் பலி

0 2238
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் ராணுவ வீரர்கள் உட்பட 119 பேர் பலி

ப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் ஜூன் 3, 4 ஆகிய இரு நாட்களில் தாலிபான்களுடன் நிகழ்ந்த மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 102 பேர் உட்பட 119 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியதை அடுத்து அங்கு அரசு படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன.

ஜூன் 3, 4 ஆகிய இரு நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 102 பேர் உட்பட 119 பேர் உயிரிழந்ததாகவும், ராணுவ வீரர்கள் 196 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3ஆம் நாளில் நிகழ்ந்த மோதல்களில் தாலிபான்கள் 183 பேரும், ஜூன் நான்காம் நாள் நிகழ்ந்த மோதல்களில் தாலிபான்கள் 181 பேரும் உயிரிழந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments