12ஆம் வகுப்பு மாணவர்களின் கடந்த கால செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்? -மதிப்பெண் நிர்ணய குழு அதிகாரிகள் தகவல்

0 13981

ன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தகால செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என மதிப்பெண் நிர்ணய குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு மதிப்பெண்களை நிர்ணயம் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்களை நிர்ணயம் செய்யலாம் என முதற்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் ஒரு பருவ தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெற்றுள்ளதால் அவற்றையும் கருத்தில் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது எனவும் நிர்ணய குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வகுப்புகள் நடைபெற்றுள்ள நிலையில், வருகைப்பதிவேடையும் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளலாமா என ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments