டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்றுமுதல் சிறார்களுக்குத் தடுப்பூசி

0 3599

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை முறையில் இன்று முதல் சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை இன்று முதல் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பீகார் மாநிலம் பாட்னாவில் இந்த திட்டம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பல்வேறு பகுதிகளில் 525 பேருக்கு தடுப்பூசி போடப்படும்.. இரண்டு வயது முதல் 18 வயதுடையோருக்கு 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசி போடப்பட உள்ளது.

முதலில் 12 வயது முதல் 18 வயதுடையோருக்கும் அடுத்து 6 வயது முதல் 12 வயதுடையோருக்கும் தொடர்ந்து 2 வயது முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கோவாக்சினுக்கு கிடைக்க உள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் சில மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கான அனுமதி பெற்று 7 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments