தளர்வுடன் கூடிய ஊரடங்கு: காய்கறி - மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை

0 4108

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் இன்று அமலாகியுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14-ந் தேதி வரை அமலில் இருக்கும். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டுனம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னையில் கொத்தால்சாவடி, ஜாம்பஜார் உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன.சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டும் நடைபெறுகிறது. நேரடியாக மீன் வாங்க வரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பபடுகின்றனர். இறைச்சிக் கடைகளும் மொத்த விற்பனையில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments