இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

0 2307

இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகக் கொட்டித் தீர்த்த பருவ மழையால் இலங்கையின் தென் மேற்கு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. கொழும்பு, ரத்னபுரா, புட்டளம் உள்ளிட்ட நகரங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். வருகிற நாட்களில் 150 மில்லி மீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்ய கூடும் என்றும் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்பதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கனமழையால் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் வரை பாதிப்படைந்து உள்ளனர். இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments