கோவா அருகே நடுக்கடலில் கப்பல் கேப்டனுக்கு உடல்நலக்குறைவு... ஹெலிகாப்டரில் சென்று மீட்பு

0 2481

கோவா அருகே நடுக்கடலில் உடல்நிலை பாதித்த கப்பல் கேப்டனை ஹெலிகாப்டர் மூலமாக இந்திய கடலோர காவல்படை துரிதமாக மீட்டது.

குஜராத்தில் இருந்து புறப்பட்ட எண்ணெய்க் கப்பலான எம்.டி. எலிம் கோவா துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பலின் கேப்டனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் அவசரகால உதவி கோரப்பட்டது. இதையடுத்து, கோவாவில் இருந்து விரைந்து சென்ற சேதக் ஹெலிகாப்டர் நடுக்கடலில் மீட்புப் பணியை மேற்கொண்டது.

கப்பல் கேப்டனான தென்கொரியாவைச் சேர்ந்த Yi Myong Bok-வுக்கு கோவா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments