இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகம்

0 2141

இந்தியாவில் 2 மாதங்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பின்படி, நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 460 ஆக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு மிகவும் குறைவாகும். இதுவரை நாடு முழுவதும் 2 கோடியே 88 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோபோல் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நேற்று மிகவும் குறைந்து காணப்பட்டது. நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேர் மரணித்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 677 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments