மும்பையில் ஊரடங்குத் தளர்வுகள் இன்று முதல் அமல்

0 4157

மகாராஷ்ட்ராவில் இன்று முதல் ஊரடங்குத் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் மும்பை நகரில் பெஸ்ட்  பேருந்து சேவை சில கட்டுப்படுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.

பேருந்தில் பயணிப்போர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருக்கையில் அமரும் அளவுக்குதான் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவார்கள். அனைத்து வகைக் கடைகள், பூங்கா ,கடற்கரை, கேட்வே ஆப் இந்தியா போன்ற பொது இடங்கள்,  போன்றவற்றை மாலை 4 மணி வரை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மால்கள், திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் அவை மூடப்பட்டிருக்கும்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.  வழிபாட்டுத் தலங்கள் குறித்தும் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments