5ஜி தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது - செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம்

0 2568
5ஜி தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது என்றும், உடல்நலத்துக்கு பாதகத்தை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

5ஜி தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது என்றும், உடல்நலத்துக்கு பாதகத்தை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மொபைல் போன்களுக்கான 5ஜி சோதனையால்தான் கொரோனா இரண்டாவது அலை பரவுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள கதிர்வீச்சு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் பத்தில் ஒரு பங்குதான் எனக் கூறியுள்ள செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்க இயக்குநர், 5ஜி ஆரோக்கியத்தை பாதிக்கும் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு 5ஜி ஒரு சேஞ்சராக இருக்கும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments