பள்ளிக் கல்வியை திறம்பட செயல்படுத்துவதற்கான தேசிய தர அட்டவணை.. முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்து சாதனை...

0 6484
பள்ளிக் கல்வியை திறம்பட செயல்படுத்துவதற்கான தேசிய தர அட்டவணையில் முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

பள்ளிக் கல்வியை திறம்பட செயல்படுத்துவதற்கான தேசிய தர அட்டவணையில் முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான செயல்திறன் தர அட்டவணையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சி பகுதிகளின் பள்ளிக்கல்வி செயல்திறன் 10 குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது,.

அதன்படி 91 சதவிகிதம் அளவுக்கு பள்ளிக்கல்வியில் திறனை வெளிப்படுத்திய மாநிலங்களுக்கு அதிகபட்ச புள்ளிகள் வழங்கப்படுகிறது.

2019-20 கல்வியாண்டில் 901 முதல் 950 புள்ளிகள் வரை பெற்று  தமிழ் நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும், சண்டிகர் மற்றும் அந்தமான்&நிகோபார்  ஒன்றிய பிரதேசங்களும் முதலிடத்தை பெற்றுள்ளன. இதற்காக  1++ என்ற தரவரிசை வழங்கப்பட்டுள்ளது, முதன்முறையாக 5 மாநிலங்கள் பள்ளிக்கல்வி செயல்திறனில் 90 சதவிகித வெற்றியை பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments