இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பை விட குணமடைவோர் அதிகம்..!

0 4018

தொடர்ந்து 24 ஆவது நாளாக, நாட்டில், புதிய தொற்று எண்ணிக்கையை விட, கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குணமடைவோர் விகிதம் 93 புள்ளி 67 விழுக்காடாகவும், தொற்று பரவல் விகிதம் 5 புள்ளி 62 ஆகவும் தொடர்கிறது.

நாட்டில், இரண்டு மாதங்களிலேயே மிகவும் குறைவாக 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2,677 பேர் அதற்கு பலியாகினர். இதையும் சேர்த்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்தை நெருங்குகிறது.

மொத்த இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் குறைந்த எண்ணிக்கையிலான தொற்று, கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி 96 ஆயிரத்து 982 ஆக பதிவானது. தினசரி தொற்று எண்ணிக்கையில் தினமும் 6000 குறையும் அதே வேளையில், நேற்று முதல் இறப்பு எண்ணிக்கையும் 700 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் ஒரே மாதத்தில் 37 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக குறைந்துள்ளது. தடுப்பூசி போட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 23 கோடியே 13 லட்சத்தை தாண்டியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments