மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு.. புதிய உறுப்பினர்கள் நியமனம்..!

0 2672

மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வரும் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவுக்குப் புதிய உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு மேற்கொண்டு வருகிறது.

இந்தக் குழுவின் துணைத் தலைவராகப் பேராசிரியர் ஜெயரஞ்சனையும், முழுநேர உறுப்பினராகப் பேராசிரியர் இராம. சீனுவாசனையும் முதலமைச்சர் நியமித்துள்ளார். பேராசிரியர் விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அகமத் இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரி தீனபந்து, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, டாபே நிறுவனத் தலைவர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் அமலோற்பவ நாதன், சித்த மருத்துவர் சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments