தமிழ் இந்தியாவின் ஆட்சி - அலுவல் மொழியாக திமுக அரசு பாடுபடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2914

ரசியலமைப்பின் எட்டாம் அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாகிட தி.மு.க அரசு உறுதியுடன் பாடுபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ், உலகின் மூத்த மொழியும், திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் மொழியும், இலக்கிய - இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழியும், பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, கல்வெட்டுக் காலம் முதல் கணினிக் காலம் வரை சிறப்புற்று விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழின் செம்மொழித் தகுதிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க, தி.மு.க அரசு தொடர்ந்து உழைத்திடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments