ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அனுமதிக்க வேண்டும் -மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

0 2297

ரேஷன் கடைகள் கொரோனா சூப்பர்ஸ்பெரட்டர்ஸ் ஆக இருப்பதால், நாடு முழுவதும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தில், டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 5 முறை ஒப்புதல் பெற்ற பிறகும் கடைசி நிமிடத்தில் அதற்கு தடை விதிக்கப்பட்டதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

பீசா, பர்கர், ஸ்மார்ட் போன், துணிவகைகள் என அனைத்தும் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படும் போது, ஏழை மக்களுக்கான ரேஷன் பொருட்களையும் வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுமதிக்க வேண்டும் என கூப்பிய கரங்களுடன் மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments