டெல்லி அரசு ஜிப்மெர் மருத்துவமனையில் மலையாளம் பேச செவிலியருக்கு தடை; மருத்துவமனையின் உத்தரவுக்கு செவிலியர் சங்கங்கள் கண்டனம்

0 3073

டெல்லியில் உள்ள அரசு ஜிப்மெர் எனப்படும் கோவிந்த் பல்லப் பந்த் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் செவிலியர்கள் மலையாளம் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றும் செவிலியர்களில் பெரும்பான்மையினர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால், மலையாளத்தில் அதிகம் உரையாடுவதாக கூறப்படுகிறது. இந்த மொழி தங்களுக்கு தெரியாது என்பதால், சிரமமாக உள்ளது என நோயாளி ஒருவர் அளித்த புகாரின் பேரில், நர்சிங் கண்காணிப்பாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், அதையும் மீறி மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு பல செவிலியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments