கூகுள், அமேசான் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் 15 விழுக்காடு வரி விதிக்க உடன்பாடு..!

0 3278

கூகுள், அமேசான் மற்றும் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் 15 விழுக்காடு வரி விதிப்பது என வளர்ச்சியடைந்த 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் உடன்பாடு செய்துள்ளனர்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதில் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் 15 விழுக்காடு வரி விதிக்க வேண்டும் என்கிற உடன்பாடு எட்டப்பட்டது. மற்ற நாடுகளும் இந்த உடன்பாட்டுக்கு ஏற்றபடி வரி விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிறுவனங்கள் குறைந்த வரி விதிப்புள்ள நாடுகளுக்கு லாபத்தை எடுத்துச் சென்றால் அவற்றுக்கு வழங்கும் ஊக்கத் தொகையைக் குறைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments