நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1.14 லட்சமாகக் குறைந்தது..!

0 3649
நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1.14 லட்சமாகக் குறைந்தது

24 மணி நேரத்தில், புதிதாக கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 460 ஆக பதிவானதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் 2 ஆயிரத்து 677 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்தனர். நோய் தொற்றில் இருந்து குணமான சுமார் ஒரு லட்சத்து 89 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சுமார் 14 லட்சத்து 78 ஆயிரம் பேர் மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளனர். 23 கோடியே13 லட்சத்து 22 ஆயிரத்து 417 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments