71 கண்ணி வெடி, 38 வெடி பொருட்களை கண்டுபிடிக்க உதவிய கம்போடியாவின் மகாவா என்ற எலி பணியிலிருந்து ஓய்வு..!

0 3197
71 கண்ணி வெடி, 38 வெடி பொருட்களை கண்டுபிடிக்க உதவிய கம்போடியாவின் மகாவா என்ற எலி பணியிலிருந்து ஓய்வு..!

ம்போடியாவின் கதாநாயகன் என்று வர்ணிக்கப்பட்ட மகாவா என்ற எலி தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றது.

7 வயதான இந்த ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க பயிற்சி பெற்றிருந்து. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.

தனது வாழ்நாளில் 71 கண்ணி வெடிகள், 38 வெடிபொருட்களைக் கண்டுபிடித்த மகாவாவிற்கு இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments