மின்னல் தாக்கி உயிரிழந்த முதியவர் ... உடலை சுற்றிச் சுற்றி வந்து பரிதவித்த வளர்ப்பு நாய்... காண்போரை கலங்கடித்த சம்பவம்

0 5320

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த எஜமானரின் உடலை அவரது வளர்ப்பு நாய் சுற்றிச் சுற்றி வந்து பரிதவிப்பை வெளிப்படுத்திய காட்சிகள் காண்போரை கலங்கடித்தன.

பேரளி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நேற்று மாலை ஆடு மேய்க்கச் சென்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கிறார். வீட்டு வாசலில் ராமச்சந்திரனின் உடலைக் கிடத்தி, உறவினர்கள் சுற்றி நின்று கதறி அழுதுகொண்டிருந்தனர்.

ராமச்சந்திரன் ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று அவரது சடலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து தனது பரிதவிப்பை வெளிப்படுத்தியது. ராமச்சந்திரனின் உடல் மீது ஏறியும் இறங்கியும் அது தவித்த விதம் அங்கிருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments