நைஜீரியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை விதிப்பு..!

0 2779

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை ஆப்பிரிக்க நாடான நைஜீரியா தடை செய்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் தங்கள் நாட்டு விதிகளை மீறியதாக அந்நாட்டு அதிபர் முகம்மது புஹாரி குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது அந்த வலைதளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய வலைதளமான கூ இந்தியா நிறுவனம் நைஜீரியாவில் கால் பதிக்க முயன்று வருவதாக கூ நிறுவனத்தின் இணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் நைஜீரியாவில் உள்ள உள்ளூர் மொழிகளில் தகவல் பரிமாறும் வசதி குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் இந்தியாவிலும் ட்விட்டருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் பிரச்னையில் பாஜகவைச் சேர்ந்த பல அமைச்சர் கூ வலைதளத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments