முகநூல் லைவில் தற்கொலைக்கு முயன்ற நபர்..! அமெரிக்க நிர்வாகிகள் தந்த தகவலால் உடனடியாக மீட்பு

0 2683

டெல்லியில் முகநூலில் தாம் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த 39 வயது நபர் குறித்து போலீசாருக்கு அமெரிக்காவின் முகநூல் நிர்வாகம் தகவல் தந்தது.

இதனால் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மீட்டு ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். பாலம் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ஜூன் 3ம் தேதி நள்ளிரவில் தனது கை நரம்புகளை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை அவர் லைவ் ஆக முகநூலில் பதிவு செய்ததையடுத்து முக நூல் நிர்வாகம் போலீசாரை எச்சரித்தது. உடனே அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அவரை பலத்த காயத்துடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments