கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் பலி..!

0 3380
கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் பலி

கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ சங்க பதிவேட்டில், டெல்லியில் அதிகபட்சமாக 109 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பீகாரில் 97 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 79 பேரும், ராஜஸ்தானில் 43 பேரும் கொரோனா 2வது அலையில் உயிரிழந்துள்ளதாக பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று முதல் அலையில் நாடு முழுவதும் 748 மருத்துவர்கள் தங்கள் உயிரை இழந்திருப்பதாகவும் மருத்துவ சங்கத்தின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments