பிரதமர் மோடியும், ஷி ஜின்பிங்கும் பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் - ரஷ்ய அதிபர் புதின்

0 3710
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள எல்லைப் பிரச்சனையை தீர்க்கும் திறன் அவர்களுக்கு உண்டு எனவும், ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

பிடிஐ நிறுவனத்திற்கு இன்று காணொலியில் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையில் வேறோரு வல்லரசு நாடு தலையிடக் கூடாது என அவர் கூறினார்.

அண்டை நாடுகளுக்கு இடையே இது போன்ற பிரச்சனைகள் இருப்பது சகஜம் என்ற அவர், மோடி மற்றும் ஷி ஜின்பிங்கின் அணுகுமுறை குறித்து தமக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

சீனாவுடன் ரஷ்யாவின் நெருக்கம் அதிகமாகி வருவது, இந்தியாவுடனான உறவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, இந்தியாவும், ரஷ்யாவும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் வெற்றிகரமான உறவை வைத்துள்ளதாக புதின் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments