தடுப்பூசி போட மக்களிடம் பேரார்வம்.! கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்க கோரிக்கை

0 2083
தமிழ்நாட்டில், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன், நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிப் போட்டுச் சென்றனர். பல இடங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழ்நாட்டில், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன், நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிப் போட்டுச் சென்றனர். பல இடங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

மதுரையில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் முகாமில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி 3,64,128 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரையில் 1,39,549 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் மட்டும் தடுப்பூசி முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தஞ்சையில் மீண்டும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 117 இடங்களில் தடுப்பூசி மையம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு உள்ளதா? என்பதை பொதுமக்கள் உறுதிபடுத்திக் கொள்ளும் வகையில், இலவச தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் காலை முதலே ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள காத்திருந்த நிலையில், தடுப்பூசி இன்னும் வரவில்லை என அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுத்தமாக கையிருப்பு இல்லாததால் கொரானா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு மையங்களில் முன்பதிவு மட்டும் செய்யப்படுகிறது. கூடுதல் தடுப்பூசி வந்தவுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கரூரில் தடுப்பூசி செலுத்தும் முகாமில் அதிகாலையில் இருந்து திரண்ட பொதுமக்கள், போதுமான கையிருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கரூர் மாவட்டத்திற்கு 3 நாட்களுக்கு முன் வந்த 10ஆயிரம் டோஸ்களும் தீர்ந்துவிட்ட நிலையில், முகாம்களில் அதிகாலையில் இருந்து காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தடுப்பூசி இல்லை என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனால் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments