குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு டுவிட்டருக்கு மீண்டும் புளூ டிக்

0 3108
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு டுவிட்டர் கணக்கில் நீக்கப்பட்ட நீலப்பட்டை மீண்டும் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு டுவிட்டர் கணக்கில் நீக்கப்பட்ட நீலப்பட்டை மீண்டும் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் கணக்குகளில் குறிப்பிடத் தக்க, உண்மையான, செயல்பாட்டில் உள்ள கணக்குகளுக்கு நீலநிறப் பட்டையில் சரி என்னும் அடையாளம் இடப்பெறும்.

சரிபார்க்கப்படாத டுவிட்டர் கணக்குகளில் இருந்து முன்னறிவிப்பின்றி நீலப்பட்டை நீக்கப்படும். இந்நிலையில் வெங்கைய நாயுடுவின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் இருந்த நீலப்பட்டை நீக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலையில் இருந்தே அந்தக் கணக்கு செயல்பாடில்லாமல் இருந்ததால் அது நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள டுவிட்டர் நிறுவனம், வெங்கைய நாயுடு டுவிட்டருக்கு மீண்டும் நீலப்பட்டை அடையாளத்தை வழங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments