பயாலஜிகல்-இ நிறுவனம் உருவாக்கும் Corbevax தடுப்பூசி நாட்டில் விலை குறைவான தடுப்பூசியாக இருக்கும் என தகவல்

0 3017
பயாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்து வரும் Corbevax தடுப்பூசி, பயன்பாட்டுக்கு வரும் போது, நாட்டிலேயே விலை குறைந்த தடுப்பூசியாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

பயாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்து வரும் Corbevax தடுப்பூசி, பயன்பாட்டுக்கு வரும் போது, நாட்டிலேயே விலை குறைந்த தடுப்பூசியாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தடுப்பூசியானது, காலங்காலமாக இருந்து வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால் அதன் விலை டோஸ் ஒன்றுக்கு 110 ரூபாயாக மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி, மாநிலங்களுக்கு டோசுக்கு 300 ரூபாயாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ஆகவும் விற்கப்படுகிறது.

கோவேக்சின் தடுப்பூசியின் விலை அரசுக்கு 400 ரூபாய் ஆகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 ரூபாயாகவும் உள்ளது. எனவே Corbevax தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கிடைத்தால், அதுவே விலை மலிவான தடுப்பூசியாக இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments