நீட் தேர்வின் தாக்கம்.. ஆராய்ந்து அறிக்கை அளிக்கக் குழு; முதலமைச்சர் அறிவிப்பு..!

0 2928

மிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அரசின் செய்திக் குறிப்பில், சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு கைவிடப்பட வேண்டும் என்றும், 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நீட் தேர்வால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அனைவரும் பயன்பெறத் தக்க மாணவர் சேர்க்கை முறையை வகுத்து அரசுக்குப் பரிந்துரைக்கவும் நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் கல்வியாளர்கள், அலுவலர்கள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments