சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

0 6018
சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

சென்னை எழும்பூரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேசினர்.

அதிமுக தலைமையகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்ததாக சர்ச்சை எழுந்தது. புதிய வீட்டுக்கு கிரக பிரவேஷம் செய்வதால் ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், எழும்பூரிலுள்ள நட்சத்திர விடுதியில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். சந்தித்து பேசினர். சுமார் 15 நிமிடங்கள் வரை நடந்த ஆலோசனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டாலும், அரசியலுக்கு மீண்டும் வருவதுபோல் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி வரும் நிலையில், இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments