தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 3511
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், தமிழக அரசு எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கையால் தற்போது 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது என்றார்.

அதேசமயம், 10 மாவட்டங்களில் தொற்று சற்று அதிகரித்திருக்கிறது என்ற அவர், தொற்று பாதித்த அறிகுறி தெரிந்தவுடன் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தாலும் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments