கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம்..! 7 பேர் கொண்ட கமிட்டி நியமனம்

0 4074
கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம்..! 7 பேர் கொண்ட கமிட்டி நியமனம்

மிழக கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு உள்ளது.

கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குழு வரும் 11-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்பிற்கான வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேரடி வகுப்புகளைப் போன்றே ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனி குழு, வகுப்புகளை முழுவதுமாக ரெக்கார்ட் செய்ய நடவடிக்கை, புகார் பிரிவு உருவாக்குதல், இணைய வசதியை வேகப்படுத்துதல் உள்ளிட்டவைகளை இந்த குழு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கலை அறிவியல் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments