காஷ்மீர் மலைக்கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சீறிப் பாயும் ஆற்றை கடந்து சென்ற சுகாதாரத்துறை ஊழியர்கள்

0 2971

காஷ்மீரின் மலைக்கிராமத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் சீறிப்பாயும் ஆற்றில் இறங்கி சென்றனர்.

ரஜோரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்திற்கு 2 பெண்கள் உள்பட 3 சுகாதார ஊழியர்கள் நேற்று கொரோனா தடுப்பூசி கொண்டு சென்றனர். அப்போது அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் சீறிப்பாயும் ஆறு ஒன்று குறுக்கிட்டது.

இருந்தும் மனம் தளராத அவர்கள் 3 பேரும் பாய்தோடும் ஆற்றில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஆற்றை கடந்து, கொரோனா தடுப்பூசியையும் பத்திரமாக பாதுகாத்த படி எடுத்து சென்று அங்குள்ள மக்களுக்கு செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments