நிரம்பி வரும் மோர்தானா அணை..! கவுண்டன்யா ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 2983
நிரம்பி வரும் மோர்தானா அணை..! கவுண்டன்யா ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைந்துள்ள மோர்தானா அணை கனமழை காரணமாக நிரம்பும் என்பதால் கவுண்டன்யா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மோர்தானா, சேம்பள்ளி, ஜீட்டபல்லி, உப்பரபள்ளி, மீனூர், தட்டப்பாறை, அக்ரஹாரம், பெரும்பாடி, குடியாத்தம் நகரம் உள்ளிட்ட கரையோரம் உள்ள கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கன மழை நேரத்தில் கவுண்டண்யா ஆற்றில் எந்த நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றில் குளிப்பது மற்றும் துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments