டெல்லியில் பலத்த மழையால் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் 100 கூடாரங்கள் சேதம்

0 2382

டெல்லியில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியதில் விவசாயிகள் போராட்டத்திற்காக போடப்பட்டிருந்த 100 கூடாரங்கள் பலத்த சேதம் அடைந்தன.

கடந்த ஆறுமாத காலமாக விவசாயிகள் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி டெல்லி எல்லையருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று டெல்லியில் வானிலை மாறியது. நகரம் எங்கும் பலத்த மழை பெய்தது. பலத்த காற்றுடன் கூடிய மழையால் விவசாயிகள் அமைத்த 100 கூடாரங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.

இதனால் இரவை தங்கள் டிராக்டர் வேன் போன்ற வாகனங்களில் கழித்த விவசாயிகள் காலை முதல் மீண்டும் கூடாரங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments