கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்..! தன்னலம் பாராமல் செயல்பட்ட மருமகளுக்கு குவியும் பாராட்டு மழை

0 12422
கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்..! தன்னலம் பாராமல் செயல்பட்ட மருமகளுக்கு குவியும் பாராட்டு மழை

சாமில் கொரோனா பாதித்த மாமனாரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக தன்னலம் பாராமல் முதுகில் சுமந்து சென்ற மருமகளுக்கு சமூகவலை தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Bhatigaon னில் வசித்து வரும் Thuleshwar Das என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது மருமகள் Niharika மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.

ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று யோசித்த அவர் சிறிதும் தாமதிக்காமல் தன் முதுகில் சுமந்து சென்று அருகில் இருந்த வாகனத்தின் மூலம் மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் மாமனாரை முதுகில் சுமந்து வந்ததால் நிகாரிகாவுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments