பிரதமர் மோடிக்கு நள்ளிரவில் கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது

0 3151

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி காவல் கட்டுபாட்டு அறைக்கு நள்ளிரவில் போன் செய்த மர்ம நபர் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய உள்ளதாக மிரட்டல் விடுத்து உள்ளார். இதையடுத்து மர்ம நபரை கண்டுபிடிக்க டெல்லி போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர், உளவுத் துறையினர் என பல்வேறு குழுக்களாக முடுக்கி விடப்பட்டனர்.

இதையடுத்து போன் செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை கஜூரி காஸ் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர் சல்மான் என்ற அர்மன் என்றும் உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தின் லோனி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments